கோவை அரசு மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகள் வழங்கிய தம்பதியினர் வாழ்த்துவோம்

 


               அரசு மருத்துவமனைக்கு உதவிய கோவை தம்பதியினர் . . .

கோவை அரசு மருத்துவமனை  முதல்வர் கூறியதாவது முழுக்க குளிரூட்டப்பட்ட மருத்துவமனை என்பதால் எங்கள் மருத்துவமனைக்கு மின்விசிறி வசதி இல்லை .கொரோனா காலத்தில்  A/C பயன்படுத்தக் கூடாது என்பதால் அரசாங்கம் சார்பில் 300 மின்விசிறிகள் வழங்கப்பட்டது. மேலும் மின் விசிறி தேவைப்படுவதால் மின்விசிறிகள் வழங்கலாம் என்று கொரோனா காலம் முடிந்தவுடன் விரும்பினால் கொடுத்தவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.

அதைக்கேட்டு  கோவையை சேர்ந்த தம்பதியினர் எங்கள் எங்கள் பெயர் விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறி ESI மருத்துவமனைக்கு 100 மின்விசிறிகள் வழங்க வந்திருந்தார்கள். அவர்களை விசாரித்த போது முதல்வரின் அறிவிப்பைக் கேட்டவுடன் தங்களிடம் உடனடியாக பணம் இல்லாததால் தங்களிடம் உள்ள  நகைகளை2,20,000 அடகு வைத்து நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்க வந்தனர்.

மருத்துவ கல்லூரி முதல்வர் தங்கள் சக்திக்கு தகுந்தார்போல் 5 மின் விசிறிகள் வழங்குமாறு கூறினார் அதை அவர்கள் கேட்க மறுத்து நாங்கள் கொடுத்துவிட்டு தான் போவோம் என்று கூறினார்கள்.

முதல்வர் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்து மாவட்ட ஆட்சியாளர் தம்பதிகளுடன்  பேசிய பிறகு அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் மனது வருத்தப்பட வேண்டாம் என அவற்றை பெற்றுக்கொண்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனே வழங்க அறிவுறுத்தினார்.

இரக்க மனம் படைத்த தம்பதியினருக்கு முதல்வர் மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள்,  மருத்துவமனை ஊழியர்கள் மற்றும்  நோயாளிகளின் சார்பில் நன்றி கூறினார்கள்.