தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

 


இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக, கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து, மக்கள் மத்தியில் அலட்சிய போக்கு அதிகரித்தது. இதன் காரணமாக,  கடந்த 3 மாதங்களுக்கு முன்பதாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை போல, தற்போதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று  வந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து தன வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விடுதல் போன்றவற்றை குறித்து ஆலோசிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 இதுவரை இந்தியாவில், 3 கோடியே 17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.