இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கமலஹாசன் உட்பட பல அமைச்சர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் (சனி, ஞாயிறு) விடுமுறை.
இதனையடுத்து, இன்று திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கமலஹாசன் உட்பட பல அமைச்சர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது.