இன்று ஒரு ஆன்மீக தகவல்
திருப்பதி பெருமாளை நேரடியாக தரிசனம் செய்யலாமா? அப்படி செய்வது சரியா?
திருப்பதிக்கு செல்பவர்கள் நேரடியாக பெருமாளை தரிசனம் செய்யலாமா?
🙏 நமது பாரத நாட்டில் உள்ள சுயம்பு மூர்த்த திருத்தலங்களில் 'வேங்கடாத்ரி" எனப்படும் திருமலை திருப்பதி பக்தர்களின் மனம் கவர்ந்த ஒன்றாகும்.
🙏 அங்கு இறைவன் சிலை வடிவமாக நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் செய்கிறார். 'திருப்பதி சென்று வந்தால் திருப்பம் நேரும்.." என்ற சொல் வழக்கு பக்தர்களிடையே பிரபலமானது.
🙏 பொதுவாக, திருப்பதி செல்பவர்கள் மலை ஏறியவுடன் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வரிசையில் நின்று கொள்வதும், அவரை தரிசித்துவிட்டு உடனடியாக வீடு திரும்புவதும் சாஸ்திர சம்மதமானதாக கருதப்படவில்லை.
🙏 திருப்பதிக்குச் செல்பவர்கள் திருமலையில் வெங்கடேசப்பெருமாளை தரிசித்து வழிபட்டு, தங்கள் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
🙏 அதில் குறையொன்றுமில்லைதான். ஆனால் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பாக, யாரை வணங்க வேண்டும் தெரியுமா? வாங்கப் பார்க்கலாம்.
முதலில் யாரை வணங்க வேண்டும்?
🙏 முதலில் அலமேலுமங்காபுரம் சென்று பத்மாவதி தாயாரை தரிசித்து மனமும், இதயமும் ஒருங்கே இணைத்து வணங்க வேண்டும்.
🙏 அதன் பிறகு, திருமலையின் மீது ஏறிய பிறகு 'வராக தீர்த்த கரையில்" கோவில் கொண்டிருக்கும் 'வராக மூர்த்தியை" தரிசித்து வணங்க வேண்டும்.
🙏 அதற்கு பிறகுதான் மலையப்பன் என்றும், ஏழுமலை வாசன் என்றும் சொல்லப்படும் திருவேங்கடவனை வழிபட வேண்டும்.
நேரடியாக பெருமாளை தரிசனம் செய்யலாமா?
🙏 திருப்பதி போனால் பலர் நேராக பெருமாள் தரிசனம் தான் செய்கிறார்கள் இப்படி செய்வது தவறு.
🙏 சிவன் கோவிலில் முதலில் சிவ தரிசனம் செய்து விட்டு மற்ற பரிவாரங்களை தரிசனம் செய்ய வேண்டும்.
🙏 ஆனால் பெருமாள் கோவில்களில் முதலில் அனுமான், தாயார், கருடன் பிறகு தான் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும்.
🙏 அதேபோல் திருமலைக்கு செல்லும் முன் முதலில் அலமேலுமங்காபுரம் என்னும் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து தான் மலைக்கு செல்லவேண்டும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை
திருச்சானூர் பத்மாவதி கோவில் :
🙏 திருப்பதி அருகில் உள்ள ஊர் தான் திருச்சானூர். தாயார் அலர்மேல் மங்கை என்றும், பத்மாவதி தாயார் என்றும் வணங்கப்படுகிறார். தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.