மகளீர் தினத்தை முன்னிட்டு புல்லட்டில் பறந்த பெண்கள்

 


மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர்.

இன்று நாடு முழுவதும் சர்வதேச மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. 

பெண்களை பொறுத்தவரையில், பலவீனமானவர்கள், பெண்களால் இதை மட்டும் செய்ய முடியும் என்ற காலம் மாறி, பெண்களால் எதையும் செய்து காட்ட முடியும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.

அந்த கோவையில், மகளீர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றுள்ளனர். 

கோவை சாய் பாபா காலனி தொடங்கி தடாகம், அணைக்கட்டி வழியாக பேரணி சென்றனர். 

இந்த பேரணியில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.