டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக-க்கு 65 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கப் போவது யாரு என்ற நோக்கில் டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக 158 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக-க்கு 65 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.