அஜித் படங்களுக்கு இசையமைப்பதற்கு தான் மெனக்கெடுவேன் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு மீதம் 10 நாட்கள் உள்ள நிலையில், அந்த கட்சியை எடுப்பதற்காக படக்குழு வருகின்ற ஏப்ரல் மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு செல்லவுள்ளனர்.
மேலும் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் அஜித் படங்களுக்கு இதுவரை இசையமைத்து அணைத்து படங்களும் நல்ல வெற்றியை கொடுத்தது.
இவர்கள் இருவரும் இணைந்தால் கண்டிப்பாக அந்த படத்தின் இசை மிகவும் அருமையாக இருக்கும். இதற்காகவே இந்த இரண்டு பேரும் இணைந்தால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து படத்திற்காக காத்திருப்பார்கள்
வலிமை படத்திற்கும் இசையமைப்பாளர் யுவன் தான் இசையமைத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு பேட்டியில் வலிமை படத்திற்கான சின்ன தீம் மியூசிக் மற்றும் மூன்று பாடல்கள் முடிந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.