தேர்தல் செய்திகள்




தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில், பல கட்சிகள் இருந்தாலும் அதிமுக மற்றும் திமுக இடையிலான போட்டி குறித்து தான் இன்று பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு பிரகாசமாக உள்ளது என்று ஏபிபி  மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது .

அந்த கருத்துக் கணிப்பின்படி, 

திமுக தலைமையிலான கூட்டணி 43 சதவீத வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெறும். 

அதிமுக தலைமையிலான கூட்டணி 30.6 சதவீத வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளில் வெற்றி பெறும். 


மக்கள் நீதி மையம் 7 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டு முதல் ஆறு இடங்களிலும், அமமுக 6.4 சதவீத வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிற கட்சிகள் 12.3 சதவீதம் வாக்குகள் மூன்று முதல் ஏழு இடங்களில் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

______________________________

அதிமுக-வில், தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

________________________

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து,  திமுக, அதிமுக,மநீம, நாம் தமிழர் கட்சி, விசிக, மதிமுக மற்றும் பல கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. ஆனால், பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இன்னும், முழுமையாக தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

__________________________

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

3 தொகுதிகளை திரும்பிக்கொடுத்து விட்டதாகவும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளோம். வெற்றிவாகை சூட உழைப்போம் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

__________________________