இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் தேர்தல் ஆணையம்

 


              தமிழக சட்டமன்ற தேர்தல்;இன்று முதல் வேட்புமனு தாக்கல்...


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இன்று முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் சனி ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை ஃபேட் மனுவை தாக்கல் செய்யலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.


மேலும் பொதுத் தொகுதியில் போட்டியிடுபவர்கள் ரூபாய் பத்தாயிரம் டெபாசிட் கட்ட வேண்டுமென்றும் எஸ்சி எஸ்டி வேட்பாளர்களை 5,000 டெபாசிட் கட்ட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 


அதுமட்டுமின்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்படும் என்றும் மாஸ்க் அணிந்து கொரோனா விதி முறைகளை கடைபிடித்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் 22ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினம் என்றும் அன்று மாலையே வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியாகும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.