பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

 


அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் கடந்த 12ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல், நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகங்களில் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இணைக்கப்பட்ட ஆவணங்கள், முன்மொழிபவர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில், சில தகவல்கள் மறைக்கப்பட்டதாக திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவதாக கூறப்படுகிறது.




குறிப்பாக அண்ணாமலையின் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், அந்த வழக்குகள் குறித்த தகவல்கள் வேட்புமனுவில் அவர் தெரிவிக்கவில்லை எனவும் திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.