ராயபுரம் அதிமுக வேட்பாளர் டி ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் உள்ள சின்ன மார்க்கெட் பகுதியில் அமைந்திருக்கும் அம்மன் சலவை நிலையம் சென்று சலவைத் தொழிலாளியை கௌரவப்படுத்தும் வகையில் துணியை இஸ்திரி போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
மதுரவாயில் ம.நீ.ம வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசினார். இந்த வேட்பாளர்கள் இளைஞர்கள் எந்த தவறுகளில் ஈடுபடாதவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் அவர்கள் மீது புகார்கள் இல்லை நான் அரசியலுக்கு நேரம் கழித்து வந்துவிட்டேன். நாங்கள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி தருவோம் என்று பேசி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
ராயபுரம் திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வீதி வீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்பொழுது இந்த தொகுதியில் டி ஜெயக்குமார் எந்த ஒரு நல்ல திட்டங்களையும் மக்களுக்கும் தொகுதிக்கும் செய்யவில்லை என்று கூறி வாக்கு சேகரித்தார்.
சேலம் எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத் குமார் ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார் அவர் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமி சிறை செல்ல போகிறார் என்று கூறினார்
பாரதிய ஜனதா கட்சியில் வேட்பாளர் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று மக்களிடம் தாமரைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்