தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அமைச்சர் விஜயாஸ்கரின் டைரி

 

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி  சிக்கியுள்ளது.

விராலிமலையில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையின் போது, அதிமுகவினரிடம் இருந்து கரைச்சேலைகள் மற்றும் மளிகை பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரமேஷ் என்பவர் கொண்டு சென்ற காரில், அமைச்சர் விஜயபாஸ்கர் என பெயர் எழுதப்பட்ட டைரி  சிக்கியுள்ளது.

அந்த டைரியில் பணம், சேலைகள், மளிகை பொருட்கள் விநியோகம் தொடர்பான தகவல்கள் டைரியில் எழுதப்பட்டிருந்தது. மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்கள் பட்டியலும் எழுதப்பட்டுள்ளது. அந்த டைரியில் விராலிமலை தொகுதியில் உள்ள பகுதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதி முழுவதும் பணம் மற்றும் பொருட்கள் வழங்க விஜயபாஸ்கர் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை தொடர்ந்து, காரை ஒட்டி வந்த ரமேஷ் என்பவரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.