துவரம்பருப்பு இட்லி உப்புமா

 


துவரம்பருப்பு இட்லி உப்புமா!!

காலை வேளையில் எளிமையான காலை உணவை செய்ய நினைத்தால், உப்புமா செய்து சாப்பிடுங்கள். 

இந்த உணவு செய்வதற்கு மிகவும் சுலபமானது மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். 

இந்த துவரம்பருப்பு இட்லி உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையானப் பொருட்கள் :

இட்லி அரிசி - 2 கப்

துவரம்பருப்பு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

சோடா உப்பு - 1 சிட்டிகை

மோர் மிளகாய் - 4

காய்ந்தமிளகாய் - 4

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1 டீஸ்பு ன்

கடலைப்பருப்பு - 2 டீஸ்பு ன்

உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பு ன்

கறிவேப்பிலை - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :


 முதலில் இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பை கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து கொரகொரப்பாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்துக் கொள்ளவும். பின் மாவில் சோடா உப்பு சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் எண்ணெயைத் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் வேக விடவும். 

பின்னர் இட்லிகள் நன்கு ஆறியதும் உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மோர் மிளகாய், காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

 பிறகு அதே வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு, உதிர்த்த இட்லிகளை சேர்க்க வேண்டும். 

பின் வறுத்து வைத்த மோர் மிளகாய், காய்ந்தமிளகாயை நசுக்கி சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், ருசியான துவரம் பருப்பு இட்லி உப்புமா தயார்!!! 

கமகமக்கும் துவரம் பருப்பு இட்லி உப்புமா தயார்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா