தமிழக மீனவர்களை சிங்களவனால் தொடக் கூட முடியாது என்று சீமான்

 


நான் முதல்வரானால் தமிழக மீனவர்களை சிங்களவனால் தொடக் கூட முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 

இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடம்பெற்றுள்ளனர்.

பின் இந்த கூட்டத்தில் அவர், நான் முதல்வரானால் தமிழக மீனவர்களை சிங்களவனால் தொடக் கூட முடியாது என்றும், படித்தவர்கள் அனைவருமே விவசாயத்திற்கு வேண்டும் என்றும், 60 வயதிற்கு மேல் விவசாயம் செயவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.