திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான தேசத்துரோக வழக்கை முதல்வர் பழனிசாமி வாபஸ் வாங்கினாரா..?
உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை இன்னும் வாபஸ் பெறவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உதயகுமார், முகிலன் உள்ளிட்டோர் மீதான தேசத்துரோக வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்று மக்கள் நம்புகின்றனர்.
20 ஆண்டு ஆனாலும் மக்கள் பிரச்சனைகளை எடப்பாடி பழனிசாமியால் தீர்த்து வைக்க முடியாது.
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாளில் மக்கள் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல தேர்தல்களில் அதிமுக வாக்குறுதி அளித்தது.
இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.