யார் போட்டியிட்டாலும் எனக்கு கவலையில்லை – கடம்பூர் ராஜு

 

யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவருவதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பாணிகளில் ஈடுபட்டு வருகிற நிலையில், விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியார்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர், யார் வேட்பாளராக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் வேட்பாளர் மட்டும் அறிவித்தால் வெற்றி என்ற நிலையில் தான், அதிமுக வேட்பாளர்கள் களத்திற்கு வருவோம் என்றும், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.