அமைச்சர்கள்-ஸ்டாலின் பரப்புரை செய்ய தடை செய்ய கோரி வழக்கு

 


அமைச்சர்கள், ஸ்டாலின் பரப்புரை செய்ய தடை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு பதவி வகிக்கும் அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர்  தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரசு சம்பளம் பெறுவதால் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் எனவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என கண்காணிக்க எந்த நடைமுறையும் இல்லாததால் பரப்புரை செய்ய அனுமத்திக்ககூடாது மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.