இங்கிலாந்துடன் நடைபெற்ற டி20 தொடரில் இங்கிலாந்தை விழுத்தி இந்தியா அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் நான்கு போட்டியின் முடிவில் 2-2 என தொடர் சமநிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய ஐந்தாவது டி-20 போட்டி 20-3-21 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது.
5வது இறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியத. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி -20 தொடரை இந்திய அண் 3-2 என கைப்பற்றி கோப்பை வென்று சாதித்தது. தவிர, டி20 கிரிக்கெட்டில் நம்பர்-1 அணியான இங்கிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கும் இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்து சாதனை வெற்றி பெற்றது.
3 அரைசதம் அடித்த விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருந்து வழங்கப்பட்டது.