கட்சி பொறுப்பில் இருந்து விலகிய அதிமுக எம்எல்ஏ ரத்தின சபாபதி

அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமமுக இல்லாததால் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என அதிமுக அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுற்ற சமயத்தில் அமமுகவில் இணைந்து அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி செயல்பட்டார்.

அந்த காலகட்டத்தில் அவரிடம் இருந்த அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. பின்னர், பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி மீண்டும் முழு பலத்துடன் அதிமுக ஆட்சி தொடர்ந்ததையடுத்து, அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ரத்தினசபாபதிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்ததோடு, அறந்தாங்கி தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மு.ராஜநாயகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்அமமுக இல்லாததால் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என அதிமுக அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக பிளவுற்ற சமயத்தில் அமமுகவில் இணைந்து அறந்தாங்கி எம்எல்ஏ இ.ஏ.ரத்தினசபாபதி செயல்பட்டார்.

அந்த காலகட்டத்தில் அவரிடம் இருந்த அதிமுக மாவட்ட அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. 

பின்னர், பல்வேறு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி மீண்டும் முழு பலத்துடன் அதிமுக ஆட்சி தொடர்ந்ததையடுத்து, அதிமுகவில் மீண்டும் இணைந்து செயல்படத் தொடங்கினார்.

இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ரத்தினசபாபதிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்ததோடு, அறந்தாங்கி தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மு.ராஜநாயகத்துக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக ரத்தினசபாபதிக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவி நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது. 

புதுக்கோட்டை அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தின சபாபதி எம்எல்ஏ விலகுவதாக அறிவித்துள்ளார்.

 எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக் காக்கப்பட்ட இயக்கம் தேர்தலில் படுதோல்வியை சந்தித்து விடுமோ என்ற வருத்தமும், இதைத் தடுக்க நான் முன்கூட்டியே கூறியதை ஏற்க மறுத்து விட்டார்களே என்ற ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

 ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அனுப்பிவிட்டதாக ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.