வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா

 




திருவெல்லிக்கேணி தொகுதியில், அதிமுக சிறுப்பாண்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. 

இதனால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் – திருவெல்லிக்கேணி தொகுதியில், அதிமுக சிறுப்பாண்மை பிரிவு துணைச்செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

வாக்காளர்களுக்கு ரூ.500 பணம் விநியோகம் செய்த வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணையஅதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

________________________

புதுச்சேரியில் தனியார் வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.100, ரூ,200, ரூ.500 நோட்டுகளாக கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

_________________________