விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது…! மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், மு.க.ஸ்டாலினுக்கு தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
________________________
பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு சிறந்த ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்
______________________
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.