மேஷம்
மேஷம்: துணிச்சலாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப்பொலிவு கூடும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
கடகம்
கடகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
சிம்மம்
சிம்மம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடன் பிரச்னைகட்டுக்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
கன்னி
கன்னி: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களைமுழுமையாக நம்புவார். சாதித்து காட்டும் நாள்.
துலாம்
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சிதங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
தனுசு
தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு.திறமைகள் வெளிப்படும் நாள்.
மகரம்
மகரம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.
மீனம்
மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார்.பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள்.தாயாருடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.