மக்கள் நீதி மய்யம் டார்ச் லைட் சின்னத்தில் 191 இடங்கள்

 


வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 135 இடங்களில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளை சேர்த்து மொத்தம் 191 இடங்களில் போட்டியிடுகிறது. 

மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், ஐ.ஜே.கே 40, சமக 37, தலித் முன்னேற்ற கழகம் 1, மஜத 3, புதிய விடுதலை கட்சி 1, ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம் 2, குறிஞ்சி வீரர்கள் கட்சி 1, வஞ்சித் பகுஜன் அகாதி 1, பிரகதிஷில் சமாஜ்வாதி 1, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 11 ஆகிய மொத்தம் 99 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.