ராமர் கோவில் கட்ட, சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் நன்கொடை

 


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட உள்ளது. இதற்காக பல பிரபலங்கள், கட்டுமான பணிக்காக நன்கொடை வழங்கி உள்ளனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த இஸ்லாமியரான ஹபீப் என்பவர் ராமர் கோவிலுக்கு நன்கொடையாக ரூ.1,00,008 வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தில் இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த ஒரு தொழிலதிபர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒரு லட்சத்து எட்டு ரூபாய் நிதி அளித்துள்ள சம்பவம் இந்து சமுயாய மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை சேர்ந்த R.W.D என்ற நிறுவனத்தின் உரிமையாளர் திரு.ஹபீப்.W.S என்பவர்  ஒரு லட்சத்து 8 ரூபாயை சென்னை மாநகர இந்து முன்னணி தலைவர் இளங்கோவனிடம் காசோலையாக வழங்கினார். அப்பொழுது HK அறக்கட்டளை'யை சேர்ந்த கன்பத் அவர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஜெகதீசன் அவர்களும் உடனிருந்தனர்.

ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் எழுப்புவதை எதிர்கட்சிகள் அரசியலாக்கி ஆதாயம் பார்க்க முயற்சித்து வரும் வேளையில் இஸ்லாமியர் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்து பங்காற்றியது அயோத்தி ராமர் கோவில் விவகாரம் அரசியலுக்கும் அப்பாற்பட்டது என தெளிவாகியுள்ளது.

இந்த நன்கொடையை இவர் இந்து மக்கள் நிர்வாகிகளிடம் அளித்துள்ளார். 

இதுவரை ராமர் கோவில் கட்ட நன்கொடையாக ரூ.1.511 கோடி வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.