சினிமா செய்திகள்

 

சுசிகணேசன் இயக்கும் படத்தில் வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசிகணேசன். அவர் அடுத்ததாக 17ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

********************

காதலிக்கும் கதாநாயகன் கதாநாயகிக்கு அப்பாக்கள் ஆதரவு, எதிர்ப்பு படம் பாரீஸ் ஜெயராஜ் - விமர்சனம்

ஜான்சன் இயக்கி வெளிவந்த ‘ஏ-1’ படக்குழுவினர் மீண்டும் இணைந்து, ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

****************
 வேறு வேறு கதைகளைக்கொண்ட படம் குட்டி ஸ்டோரி - விமர்சனம்

வேறு வேறு கதைகளைக்கொண்ட 4 குறும் படங்களின் தொகுப்பு, ‘குட்டி ஸ்டோரி’ என்ற பெயரில் திரைப்படமாக வந்து இருக்கிறது. முதல் குட்டி கதையின் பெயர், ‘எதிர்பாரா முத்தம்.’

********************

 காதலை தேடி அலையும் கதாநாயகனும், காதல் வலையில் சிக்க விரும்பாத கதாநாயகியும்! படம் நானும் சிங்கிள்தான் - விமர்சனம்

‘‘காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை’’ என்று கூறும் அவரிடம், ‘‘அப்படியானால் இருவரும் நண்பர்களாக இருக்கலாம்’’ நானும் சிங்கிள்தான் படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.

********************

 கிரவுன் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கும் படம் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’. 1980ல் நடந்த உண்மை சம்பவத்தை மையக்கருவாக வைத்து இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிவபாலன். உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மிக எதார்த்தமாக பேச இருக்கிறது சிதம்பரம் ரயில்வே கேட். 

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, ஏகாந்தம் படத்தில் நடித்த நீரஜா, காயத்ரி, ரேகா, சூப்பர் சுப்புராயன், பாலா சரவணனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு ஆர்.வேலு, சண்டை சூப்பர் சுப்புராயன், பாடல்கள் பிரியன், அருண் பாரதி, தயாரிப்பு மேற்பார்வை சுசி காமராஜ். சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் நடைபெறுகிறது.

**********************

சூர்யா, கொரோனாவுக்குப்பின் சற்றே மெலிவாக காணப்படுகிறார்.

இருப்பினும் அவர் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் இப்போது, பாண்டி ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம் இதுதான்.

************************

விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாரா என்றாலும், அதிகமான விளம்பர படங்களில் நடிப்பவர், சினேகாதான். இவர், ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

அவருடைய காதல் கணவர் பிரசன்னாவும் நிறைய விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

******************

 திருமணத்துக்குப்பின் ஜோதிகா நடித்த சில படங்கள், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதற்கு காரணம் அவர் மாற்றுதிறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்.

“இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை” என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

**********************

கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்து 2001-ல் திரைக்கு வந்த மின்னலே படத்தை கவுதம் மேனனே இந்தியில் ரீமேக் செய்தபோது அதில் தியா மிர்சா கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் வைல்டு டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

தியா மிர்சா முதலில் ஷாகில் சங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். 

தற்போது 40 வயதாகும் தியா மிர்சா மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் ரேஹி என்பவரை காதலித்தார். இந்த நிலையில் வைபவ் ரேஹியை தியா மிர்சா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கொரோனா விதிமுறைகளால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.