ஒரு வரி செய்திகள்

 


 நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பான 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை நீதிமன்ற உத்தரவு வரும் வரை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

++++++++++++++++++++++

 மீன்வளத்துறையில் மத்திய அரசு ரூ.20,050 கோடி முதலீடு செய்துள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

++++++++++++++++++

வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப தலைவர்கள் இயற்கையாக மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணமடைந்தால் 4 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

++++++++++++++++++++

 திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பேரவை செயலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++

 2019 நீட் தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீஸ் எடுத்த நடவடிக்கை என்ன என்று ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

++++++++++++++++++++++

 உலகின் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சி, கடும் குளிர் காரணமாக உறைந்து பனிச்சோலையாக காட்சி அளிக்கிறது.

+++++++++++++++++++++

 

மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு:

நெதர்லாந்து நாட்டில் பொதுமுடக்கத்தை மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++++++++

வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்:

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

++++++++++++++++++++++++++

மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

++++++++++++++++++++++++++

சர்தார் வல்லபாய் படேல் மைதானம் பெயர் மாற்றம்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நவீன வசதிகளுடன் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். 

இதையடுத்து சர்தார் வல்லபாய் படேல் மைதானம், நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

++++++++++++++++++++++

தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

+++++++++++++++++++++++++++

இன்று பள்ளிகள் திறப்பு:

தெலுங்கானாவில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 24.02.2021பள்ளிகள் திறக்கப்பட்டன.

++++++++++++++++++++++++++++

உச்சநீதிமன்றம் தெரிவிப்பு:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், கடைசி வாய்ப்பாக கடந்த அக்டோபரில் நடந்த தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

+++++++++++++++++++++++++

துணைநிலை ஆளுநர் உத்தரவு:

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டைகள் தர வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

++++++++++++++++++++++++++++++++++

மாவட்டச் செய்திகள்

பக்தர்கள் கோரிக்கை:

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

++++++++++++++++++++++

பார்வையிட விதிக்கப்பட்ட தடை தொடரும்:

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

+++++++++++++++++++++++++++

விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு:

இந்தியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

+++++++++++++++++++++

105வது லீக் ஆட்டம்:

7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெறும் 105வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.