ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் திரும்பிய போது சேப்பாக்கம் மைதானத்தை படம்பிடித்த பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 14.02.2021 தமிழகம் வந்தார் .நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ள நிலையில் ,பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதனிடையே 14.02.2021 இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் 14.02.2021 சென்னை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்தபடியே இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை பார்வையிட்டுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.