ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார்.
அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
கதாதர், க்ஷூதிராம் சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.
சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது.
கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார்.
இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார்.
அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.
* ஞானத்தின் முதல் அடையாளம் அமைதி. இரண்டாவது ஆணவமின்மை.
* எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உயர்ந்த மனிதன்.
* பொன், பெண், மண் மீது வைக்கும் பற்று அறிவை கெடுக்கும்.
* பசுவை நோக்கி ஓடும் கன்று போல மனமும் கடவுளைக் காண ஏங்க வேண்டும்.
* அதிகமாகப் படித்தால் விவாதம், தர்க்கம் செய்யும் எண்ணம் உண்டாகும்.
* கள்ளம் கபடமற்றவர்கள் கடவுளை எளிதில் அடையும் பேறு பெறுவர்.
* ஒருவரின் எண்ணம் எப்படியோ அப்படியே கடவுளும் அருள்புரிகிறார்.
* படிப்பதை விட கேள்வி ஞானம் உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது உயர்ந்தது.
* கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தாலும் கடவுளை அறிய முடியாது.
* குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு கடவுளை சிந்திப்பவனே வீரபக்தன்.
* கடவுளிடம் பக்தி செலுத்துவது ஒன்றே மனித வாழ்வின் சாரம்.
* தீய எண்ணம் இருக்கும் வரையில் துாய பக்தி உண்டாகாது.
* கடவுளை அடைந்த பின்னர் உலகப் பொருள்களில் மயக்கம் தோன்றாது.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்