செய்திகள்

இன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமென கல்வித்துறை தெரிவித்துள்ளது.

********************

திமுக ஆட்சிக்கு வந்து குறைகள் தீர்க்கப்படாவிட்டால் முதல்வர் அறைக்கே வந்து கேட்கலாம் என்று முக ஸ்டாலின் மக்கள் மத்தியில் உறுதி அளித்துள்ளார்.

***********************

திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமாகிய கனிமொழி இன்று மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

*****************************

இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இளைஞர்கள் முதலையை அடித்து சமைத்து சாப்பிட்டார்களா? அல்லது இறந்து கிடந்த முதலையை நீரில் இழுத்துச் சென்று விளையாடினார்களா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
*************************

48 நாட்கள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான இந்த முகாம் துவங்குகிறது.

***********************

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் B.E., B.Tech., B.Arch., M.Arch முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று கல்லூரிகள் தொடங்குகிறது.

************************

காலதாமதம் செய்யாமல் விரைந்து தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

************************

சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

********************

ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா  நினைவிடம்,  அதிநவீன அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.