நடிகர் விஷால் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியான 2 நாளில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 64 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சக்ரா திரைப்படம் 19.02.2021 4 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
மேலும் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்த நிலையில் வெளியான 2 நாட்களில் இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 64 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
***********************
இயக்குனர் விஷ்ணுவர்தன் அடுத்ததாக இயக்கியுள்ள ஷெர்ஷா என்ற பாலிவுட் திரைப்படம் ஜூலை 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். ஆம், கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமாக எடுக்கிறார்.
******************************
நடிகர் ஆதியின் பிறந்த நாளிற்கு பலதரப்பலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தது. இதற்காக நன்றி தெரிவித்து நடிகர் ஆதி தனது ட்வீட்டர் பக்கத்தில் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ” இந்த வாழ்க்கை கொஞ்ச காலம் தான் என நன்கு உணர்த்தியது கோவிட். இருக்கும் வரை பிடித்ததை, பிடித்தவர்களுடன், பிடித்தவர்களுக்காக செய்வது ஒரு பாக்கியம் தான். இந்த பிறந்தநாளை என்னை நேசிக்கும் நபர்களுடன் செட்களில் தொடங்கினேன், என்னை நிபந்தனையின்றி நேசிக்கும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.என்று தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
*************************
அஜித் நடிப்பில் வெளியான மமுகவரி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதன் முதலாக இஷா கோப்பிகர் தான் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வி. இசட் துரை இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் முகவரி. இந்த திரைப்படத்தை பிசி ஸ்ரீராம் தயாரித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். மணிவண்ணன், ரகுவரன், விவேக், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். மேலும் இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.
************************