ஆக்கபூர்வமான கோரிக்கையை நடத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள், முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து, 2-வது நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது.
கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல இடங்களில் அதிகமான பேருந்துகள் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்காலிக ஓட்டுனர்களை வைத்து சில இடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில், கடலூர் பணிமனையில், தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இயக்கிய பேருந்து, மற்றோரு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இதனை தொடர்ந்து, அந்த தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பணிமனையின் உள்ளே போலீசார் வரக்கூடாது முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.