விழுப்புரத்தில் முதல்வரின் கூட்டத்திற்கு வந்த அதிமுக கிளை செயலாளர் உயிரிழப்பு

 


விழுப்புரத்தில் நடைபெறும் முதல்வரின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக கிளை செயலாளர் உயிரிழந்தார். பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள நடுக்குப்பத்தை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் அய்யாவு (60) உயிரிழந்தார்.

*************************

நாகலாந்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை மாநில அரசு குறைத்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18.26 லிருந்து ரூ.16.04 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலுக்கான வரி 25% முதல் 26.80% குறைக்கப்பட்டுள்ளதால் விலையும் குறைந்துள்ளது.

*********************************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.77 அடியில் இருந்து 103.67 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 103 கன அடியில் இருந்து 253 கன அடியாக அதிகரித்துள்ளது.

***********************

இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை செல்வதற்காக இந்திய வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

***********************

மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் திட்டத்தின் படி வரும் 8 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

*************************

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் அளித்த புகாரில் கார்த்திகேயனை கைது போலீஸ் செய்தது.

*************************

புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் லட்சுமி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏ.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

**************************