செய்திகள்


டெல்லி எல்லையில் 95-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 82 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

________________________

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.

__________________________

தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக மதிமுக,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு இன்று மாலை 5 மணிக்கு கூட்டணி பேச்சவார்த்தை நடைபெற உள்ளது.

                        


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிப் பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

_____________________

சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பாஜக தேர்தல் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.சி.ரவி, எல்.முருகன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

_______________________

சட்டப்பேரவை தேர்தல்கூட்டணியை இறுதி செய்ய அதிமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். 

_______________________________

வடசென்னை அனல்மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளுக்கும் நிலக்கரி விநியோகம் செய்ய முடியவில்லை. கன்வேயர் பெல்ட் அறுந்ததை அடுத்து நிலக்கரி விநியோகம் செய்ய முடியாததால் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

________________________

ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அவசர தேவைக்கு ஜான்சன் நிறுவன தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 3-வது கொரோனா தடுப்பூசி மருந்து இதுவாகும்.

______________________

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தூக்கி சென்றுள்ளனர்.

______________________