திங்கள் முதல் சனி வரை உச்ச நேரங்களில் இயக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.
7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பீக் ஹவர் தவிர்த்த மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 மணி முதல் 11 மணி வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ சேவை வழங்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் பீக் ஹவர் இன்றி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும்.
******************************
திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டு வரும் விரைவு தரிசன டிக்கெட் எண்ணிக்கை 25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான இணைய தளத்தில் ரூ.300 விரைவு தரிசன கட்டண தரிசன டிக்கெட்கள் தினமும் 20,000 மட்டுமே வழங்கப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க 19-ம் தேதி முதல் 25,000 விரைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது.
*************************************
போராட்டத்தால் மூடப்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கல்விக்கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததால் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகிறது.
******************************
உதகை மற்றும் சுற்று வட்டார இடங்களில் கடும் உறைபனி நிலவுகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் இன்று காலை 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. உறைபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.
*********************************
அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 31 விரிவுரையாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வியியல் கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கு விரிவுரையாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
********************************
மதுரவாயலைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்டியுடன் வீட்டில் இருந்த சிறுயிடம் சுரேஷ் (32) என்பவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியும், பாட்டியும் சத்தம் போட்டதில் இளைஞர் தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய சுரேஷை கைது செய்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
**************************
சீர்காழி நகைக்கடை அதிபரின் மனைவி, மகன் கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. 3 பேருக்கும் ஒருநாள் போலீஸ் காவல் முடிந்ததால் நீதிமன்ற காவலில் வைக்க மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்ராஜ் சவுத்ரியின் மனைவி, மகனை கொன்று 12 கிலோ நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*******************************