உத்தரகாண்ட் - உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயார் – முதல்வர் அறிக்கை

 


உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

துயரச் செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்., 

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்ததேவி பணிக்குன்றில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்ததால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 

ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து சென்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் 18 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தேசிய பேரிடர் மீட்பு முழு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. திடீர் வெள்ளப் பெருக்கில் பரிதமாக சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், நிதி வழங்கியும் வருகிறார்கள்.