உடல்நிலை சரியில்லை என கூறிய பின்னும் அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் இல்லை.
இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், தமிழக களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
இவர்களது சந்திப்பின் போது, தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், காமல்ஹாசன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ரஜினிகாந்தை சந்தித்த போது அரசியல் பற்றி பேசவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை என கூறிய பின்னும் அவரை அரசியலுக்கு அழைப்பது நல்ல நண்பனுக்கு அடையாளம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.