மேலும் செய்திகள்

 


திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் மேற்கு கோபுரத்தின் உட்புறப்பகுதியில் திருவிடைமருதூரைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**********************

இந்திய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி, 16-வது முறையாக ராஜஸ்தானில் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படையின் 11-வது பட்டாலியன் வீரர்களும், தென் மேற்கு கமாண்ட் வீரர்களும் பங்கேற்பார்கள். அமெரிக்க ராணுவத்தின் சார்பில், 2-வது பட்டாலியன் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்பார்கள்.

***********************

விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பின் போலி செய்திகளை பரப்பிய சமூக ஊடக கணக்குகளுக்கு எதிராக டெல்லி போலீசார் 4 எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மற்றும் அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  திக்ரி மற்றும் சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நடந்து வரும் இந்த போராட்டம் 71வது நாளாக இன்றும் தொடருகிறது.

*************************

தமிழகத்தில் ஜனவரி மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய குழு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் உள்ள சீத்தப்பட்டியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

******************************

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளார்.

****************************

மியான்மரில் பேஸ் புக் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மியான்மரில் அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு எம்.பி.டி உட்பட இணையதள சேவை வழங்குனர்களால், பேஸ் புக் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் “ஸ்திரத்தன்மை” பேணுவதற்காக பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும் என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

**************************

 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மஞ்சள் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். -ரூ.8 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் சேதம் என தகவல் தெரியவந்துள்ளது.

***************************

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். யுவராஜை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் யுவராஜ் செயல்பட்டதால் நீக்கம் என்று விளக்கமளிக்கப் பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள சசிகலாவை சந்திக்க யுவராஜ் முயன்ற நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

*********************************