புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் சூழலில், இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். மேலும் இன்று மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பு நிறைவு செய்ய வேண்டும் என்றும், இந்த முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, புதுச்சேரி அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் சூழலில், இன்று காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மேலும்,சட்டப்பேரவை கூடுவதற்கு முன் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.