செய்திகள்

 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

***********************************

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடப்பட்டுள்ளது. 2020-21ம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது.

**************************

கொரோனாவை கண்டறிய தமிழகத்தின் புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி தெரிவித்துள்ளார்.

****************************

பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ₨89.96-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து              ₨82.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

*******************************

உத்தரகாண்ட் வெள்ளத்தில் 197 பேரை காணவில்லை, இதுவரை 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

******************************

சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ஏப்ரல் 4 முதல் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

********************************

“பட்ஜெட் முதலான ஆவணங்களை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளில் வழங்கவேண்டும்” பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம் ரவிக்குமார் எம்பி கோரிக்கை வைத்தார். 

**********************************

அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, நான் எதையும் சந்திக்க தயார். நீதிமன்ற உத்தரவுப்படி தான் சசிகலா, இளவரசி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதில், அரசுக்கு எந்தவித சமந்தமும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். 

******************************

துறைமுக அதிகாரங்கள் மசோதா, 2020 – நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது.   வெற்றிகரமான சர்வதேச நடைமுறைகளின்படி மத்திய துறைமுகங்களின் நிர்வாக வழிமுறைகளை மாற்றியமைத்து, முக்கிய துறைமுகங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர இம்மசோதா உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

*********************************

கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி

முகமது நபிகள் குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட பாஜகவை சேர்ந்த கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற ஒரு பிரசாரக் கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இவர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவினாசி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர்.

*******************************