தன்னைப் பெண் என்று கூறி பல போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் 70க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபர் சைபர் கிரைம் போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது எல்லாம் சமூக வலைதளம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது.
மேலும் சாதாரணமாக ஒரு செயலி இருக்கிறது என்றால் அதில் ஒரு கணக்கு தொடங்கும்பவர் தனது கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி பாலினத்தை மாற்றி வேறு ஒரு போலியான கணக்குகளையும் தொடங்கி அதன் மூலம் பல்வேறு ஏமாற்று காரியங்களையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயவாடா பகுதியை சேர்ந்த சுமன் எனும் நபர் ஹைதராபாத்தில் அமேசான் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.
பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பக் கூடிய இவர் இரவு நேரத்தில் பெண்கள் பலரிடம் தனது போலி கணக்கு மூலமாக உரையாடியுள்ளார்.
முதலில் பெண்களின் கணக்கு போல தொடங்கப்பட்டுள்ள இவரது போலி கணக்குகளை நம்பி இவரை பெண்தான் என்று நினைத்து பேசக்கூடிய பெண்களிடம் நாளடைவில் அவர்கள் முகம் சுளிக்கும் விதமாக தன்னுடைய நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார்.
இவ்வாறு சுமன் பேசிய பெண்களில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக அளித்த புகாரின் அடிப்படையில் சுமனை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்