செய்திகள்

 


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.  ரஞ்சன் கோகோய் மீது பெண் அளித்த பாலியல் புகாரை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. 2019-ம் ஆண்டு முதல் நடந்து வந்த பாலியல் வழக்கை முடித்துக் கொள்ளவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

*********************

முதல்வர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துணை முதலவர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என தேனியில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் திமுக கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கூறும் மக்களை அளித்து அதிமுக உதவி செய்கிறது என அவர் கூறியுள்ளார்.

***********************

 நாகர்கோவில் மாநகராட்சி சொந்தமான வடசேரி சந்தையில் வாடகை பாக்கி தராத 90-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாடகை பாக்கி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

*********************

கோயம்புத்தூர் அருகே பழைய குளிர்சாதன  பெட்டிகள் வைத்திருந்த குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டியில் உள்ள சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடுப்பதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 3 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்துவருகின்றனர்

***********************

இந்தியாவிலேயே ஒரே நேரத்தில் 2000 மினி கிளினிக்குகளை கொண்டுவந்தது அதிமுக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது என முதல்வர் கூறியுள்ளார். சிறப்பான திட்டங்களை கொண்டுவந்து , எல்லா துறைகளிலும் தேசிய அளவில் அதிமுக அரசு விருதுகளை பெற்று வருகிறது. நெல்லையில் பரப்புரையின் போது ஒரு ஆண் குழந்தைக்கு முதல்வர் தர்ஷன் என பெயர் சூட்டினார்.

**********************

மசகாளிபாளையம் அருகே அரசு மருத்துவமனையில்  தடுப்பூசி போட்டத்தால் 3மாத குழந்தை இறந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூலித்தொழிலாளி பிரசாத்தின் குழந்தை கிஷாந்த் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்திலேயே 3 மாத குழந்தை கிஷாந்த் உயிரிழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

***********************

 +2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

*************************