பஞ்சமி என்பதும் மாதந்தோறும், வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும்.
பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது.
சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும்.
வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும்.
வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர்.
வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (சனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரசுவதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.
வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து
தொன்ம நம்பிக்கைகள்:
மேற்கு வங்கத்தில் வசந்த பஞ்சமி நாளன்று குழந்தைகளின் கல்வி துவங்குகிறது. இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் ஆர்வமும், எதிர்காலம் அமையும் என்பது நம்பிக்கை.
வசந்த பஞ்சமி அன்று மஞ்சள் நிற ஆடையில், கைகளில் வீணையுடன் சரசுவதி தேவி
மேலும் குஜராத் போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் பல வண்ணப் பட்டங்களை காற்றில் பறக்கவிடுவர்.
பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், ஜம்மு காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
வசந்த பஞ்சமி அன்று, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர் மாலைகள் அணிவித்து பூஜை செய்கின்றனர். பூஜையில் வைக்கப்படும்…
வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி அமமன் பாடல்களை பாராணம் செய்து சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைத்து வணங்குதல் வேண்டும்.
பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான் .
வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம்.
ஞானம் கிடைக்கும் வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வசந்த பஞ்சமி நாளை, காமதேவனைப் போற்றும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
நமது வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று செம்மை நிற மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடுதல் நல்லது. நெய் விளக்கு ஏற்றுதல், அன்னதானம் செய்தல் போன்ற செயல்பாடுகள் கூடுதல் பலன் தரும்.
மேலும் வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும்.
நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம்.
வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராசி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்