சுசிகணேசன் இயக்கும் படத்தில் வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசிகணேசன்.
அவர் அடுத்ததாக 17ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
**********************
இரும்புத்திரை இந்தி ரீமேக்கில் வில்லனாக நடிக்க விஷாலிடம் பேசி வருகின்றனர். அர்ஜுன், கார்த்திக், எஸ்.ஜே.சூர்யா, அரவிந்தசாமி உள்ளிட்டோர் வில்லன் வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் ஆர்யாவும் இணைந்துள்ளார்.
விஷாலின் எனிமி படத்தில் ஆர்யா கொடூர வில்லனாக நடிக்கிறார். விஷாலுக்கு இணையாக ஆர்யாவின் வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளனர்.
***********************
கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இவர் தற்போது இயக்கியுள்ள டாக்டர் படம் வருகிற மார்ச் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே வெளியிடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
*********************
சூர்யா நடிக்கும் புதிய படத்தில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.
**************************
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல கதாநாயகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள். காரணம், அவர்களின் நீண்ட தலைமுடிக்கும், புதர் போன்ற தாடிக்கும் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது.
*******************
டைரக்டர்களிலேயே அதிக சம்பளம் வாங்குபவர், ஷங்கர்.
சம்பள விஷயத்தில், இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், ராஜமவுலி. இவர்களை தொடர்ந்து ஏற்கனவே கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சில டைரக்டர்கள் சம்பளத்தை மேலும் உயர்த்தி விட்டார்கள்.
இதுவரை ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறார்
*****************
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் சுல்தான் திரைப்படத்தை ரெமோ இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி இருக்க கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார்.
சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜுமுருகனுடன் கார்த்தி கைகோர்க்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
*******************
நான் நடிகை மட்டுமல்ல சிறந்த ஓவியரும் கூட என்பதை நிரூபித்து உள்ளார் நடிகை ஷாமிலி. குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் இப்பொழுது கதாநாயகியாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
.