நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணிசெல்லத்துரை- மர்ம நபர்கள் - வெட்டி கொலை

 



நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்த செல்லத்துரை என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள, அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர். செல்லத்துரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்துள்ளார். 

இவர் நேற்று தனது வீட்டிலிருந்து தனது கோழிப்பண்ணைக்கு  சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.  

இதனையடுத்து, கொலைக்கான காரணம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.