இன்று ஒரு தகவல்

 


உடலின் உள்ளுறுப்புகளுக்கு உடற்பயிற்சி அவசியமா ?

கல்லீரல் (English: Liver) (ஈரல் - இலங்கை வழக்கு) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் வேறு சில விலங்குகளின் உடலிலும் காணப்படும் ஒரு முக்கிய உள் உறுப்பாகும்.

மனிதர்களுக்கு மார்புக் கூட்டின் வலது கீழ்புறத்தில், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும் நெஞ்சறையையும் வயிற்றறையும் பிரிக்கும் இடைத்திரைக்கு கீழாகவும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. 

இதற்குக் கீழாக பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன. இதுவே உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். 

மாந்தர்களில் கல்லீரல் பார்ப்பதற்கு செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். இது ஏறத்தாழ 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும். கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கித் தருவதால் இதனை உடலின் வேதிப்பொருள் தொழிலகம் என்று கருதுவது பொருந்தும்

மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது.

வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றல், புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன

நம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது கல்லீரல். நமது உடலில் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு இதுவாகும். நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்வதற்கு வேண்டிய பித்தநீர் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது.

உணவு சமிபாட்டின் பின்னர் உருவாகும் எளியவடிவிலான ஊட்டக்கூறுகள், தேவைக்கு அதிகமாக இருக்கையில் வேறு வடிவுக்கு மாற்றப்பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படும். பின்னர் உடலுக்கு ஊட்டக்கூறுகளின் தேவை ஏற்படுகையில், எளிய வடிவில் மாற்றப்பட்டு, குருதியினூடாக தேவைப்படும் இடத்துக்கு கொண்டு செல்லப்படும். 

பொதுவாக எல்லா குடல் பாகங்களிலிருந்தும் உடலுக்குள் நுழையும் வெளிப்பொருட்கள் யாவற்றையும் போர்டல் இரத்த ஓட்டம் மூலமாகத் தன்னுள் கல்லீரல் இழுத்துக் கொள்கிறது.

இன்றியமையாத பல பணிகளைச் செய்யும் கல்லீரல் நோய்வாய்ப்படவும் அதிக வாய்ப்புள்ளது. கல்லீரல் உயிரணுக்களில் பல நொதிகள் காணப்படுகின்றன.கல்லீரல் உயிரணுக்கள் பாதிப்படயும்போது இவை நோய் நிலைகளின்போது இரத்தத்தில் வெளிப்படுகின்றன.

கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும், அந்த நிலைமையில் அந்த உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும்.

இந்த நிலைமையானது தனது வரம்பிற்குள்ளேயே அடங்கலாம், மேலும் தன்னாலேயே குணமாகலாம், அல்லது மேலும் மோசமடைந்து கல்லீரலில் வடு ஏற்படலாம். 

ஆறு மாதங்களுக்கும் குறைவாக கல்லீரல் அழற்சி இருந்தால், அந்நிலைமை கடுமையான பாதிப்பை குறிக்கும் ஆனால் அதற்கு மேலும் நீடித்தால் அப்போது அது கடுமையாக நீடிக்கும் வகையை சாரும். 

உலகளவில் உடல் நலத்தை மிகையாக பாதிக்கும் இவ்விதமான கல்லீரல் சேதாரத்திற்கு ஒரு குழுவை சார்ந்த கல்லீரல் அழற்சி தீநுண்மங்கள் அல்லது நச்சுயிரிகளே காரணமாகும்.

இரத்தம் உறையவும் கல்லீரல் உதவுகிறது. மேலும் கல்லீரல் ஆரோக்கியமாகச் செயல்பட வேண்டுமானால் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும், உடற்பயிற்சியும் அத்தியாவசியத் தேவையாகும். அதைப் பற்றி இங்கு காண்போம்.

நாம் செய்ய வேண்டியவை :

நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் உள்ள சரியான அளவு உணவை நாம் சாப்பிட வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டால் நம் கல்லீரலுக்கு மிகவும் நல்லதாகும்.

ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மற்றும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்

தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

எடையைக் குறைக்க விரும்பும் போது மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு பின்பற்ற வேண்டும். 

ஆரோக்கியமான உணவு, தினமும் தொடர் உடற்பயிற்சி செய்து வந்தால் நம் கல்லீரலைக் பாதுகாக்க முடியும்.

நமது பிஎம்ஐ அளவு இயல்பான நிலையில் 18 - 25 இருக்கும் படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற பு ண்டு உதவுகிறது. 

உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலில் இருந்து வெளியேற்ற மஞ்சள் உதவுகிறது

உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற பீட்ரூட், கேரட் உதவுகின்றன. எனவே உணவில் கட்டாயம் இவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யக்கூடாதவை :

கொழுப்பு நிறைந்த, சர்க்கரை மற்றும் உப்பு அதிகமான உணவுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் வறுத்த, பொரித்த உணவு வகைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

மேலும் மது அருந்துவதன் மூலம் நம் உடலில் முதலில் பாதிப்பு அடைவது கல்லீரல் ஆகும். எனவே மது அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை தவிர எந்த துணை உதவியும் கிடையாது. 

கல்லீரல் மாற்று சிகிச்சை தேவையின் பிற காரணங்கள் கல்லீரல் புற்றுநோய், தீங்கற்ற கல்லீரல் கட்டிகள் மற்றும் பரம்பரை நோய்கள்.

ஒரு மாதம் முதல் அதிக பட்சம் இரண்டு வருடங்கள் மட்டுமே வேறு எந்த வித பிரச்சனை இல்லாமல் உயிர் வாழ முடியும்.

இடையில் கூட சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு இருக்கும் பட்சத்தில் வாழ் நாள் இன்னும் குறையத் தொடங்கும். 

அதனால் வரும் முன் காப்பது மட்டுமே, இல்லை இருப்பதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுவது மட்டுமே சிறந்த வழி என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்