நண்டு வறுவல் மற்ற அசைவ உணவுகளை விட சுவையானது.
இந்த நண்டு வறுவலை இட்லி, தோசை, சாதம் என எல்லாவகை உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
இப்போது இந்த நண்டு வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
நண்டு - அரை கிலோ(சுத்தம் செய்தது)
சின்ன வெங்காயம் - 25
தக்காளி - 3(நறுக்கியது)
மிளகாய்த் தூள் - 2 TSP
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
வதக்கி அரைக்க:
தேங்காய் துருவல் அரை கப்
பூண்டு - 15 பல்
மிளகு - 3 TSP
தாளிக்க:
நல்லெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - 1 TSP
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை :
நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் பூண்டு மற்றும் மிளகு சேர்த்து வதக்கி, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
பின், ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்க வேண்டும்.
பிறகு தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கி, அரைத்த தேங்காய்,மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பச்சை வாசனைப் போகும்வரை வதக்க வேண்டும்
பின்னர், அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
பின் நண்டு நன்றாக வெந்ததும், மசாலா கலவை கெட்டியானவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், காரசாரமான சண்டே ஸ்பெஷல் நண்டு வறுவல் தயார்!!!
சூப்பரான நண்டு வறுவல் ரெடி.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா