செய்திகள்

 


தமிழக அரசுப் பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்தமாக வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன்பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

**********************************************

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

*************************

 மதுராந்தகத்தில் வீட்டின் வளாகத்தில் பள்ளம் தோண்டும்போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சாமி  சிலை கண்டெடுக்கப்பட்டது.

இங்கு சுமார் 1000 ஆண்டுகள் பழமையான வரதராஜ பெருமாள் கோயில்,  பாலாற்றங்கரையோரம் உள்ளது. இந்த கோயிலின் பின் பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வசிக்கிறார். 

இந்நிலையில், நேற்று காலை வீடு கட்டுவதற்காக, பள்ளம் தோண்டும் பணியில் ெதாழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, மணலில் கல்லால் ஆன சாமி  சிலை இருப்பது தெரிந்தது. 

 தகவலறிந்து மதுராந்தகம் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ஜீவா, மேலாளர் வீரராகவன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை என தெரிந்தது. 

*************************

திருவையாறில் நேற்றுமுன்தினம் மாலை தியாகராஜரின் 174-வது ஆராதனை விழாவை சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். 

அதை தொடர்ந்து இரவு 8 மணி வரை இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் 2-வது நாளான நேற்று, 9 மணி முதல் 10 மணிவரை பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் பிரபல கர்நாடக இசை கலைஞர்கள் 500 பேர்  கலந்து கொண்டனர்.

*************************