பிரியாணி சுவையாக செய்ய வேண்டுமா.
👉பிரியாணி செய்ய நல்ல தண்ணீர் அவசியம். உப்புத் தண்ணீர் சுவையை மாற்றி விடும்.
👉 ஆம்பு ர் பிரியாணியின் தனித்துவமே கறியை மசாலாவில் வேகவிடுவது தான்.
👉 கொத்தமல்லி புதினாவை ரொம்ப அரைக்காமல், பொடியாக நறுக்கி போட்டால் வாசம் நன்றாக இருக்கும்.
👉 செட்டி நாடு பிரியாணி செய்யும்போது மிளகு, தேங்காய் பால் மற்ற மசாலாக்களை எல்லாம் அரைத்து சேர்த்து அப்படியே தண்ணீர் ஊற்றி செய்யலாம்.
👉 அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
👉 தேங்காய், கசகசா, முந்திரி சேர்த்து அரைப்பது ஒரு வகை சுவையை தரும்.
👉 தேங்காய் மட்டுமே அரைப்பது ஒரு வகை சுவையை தரும். தேங்காய் பாலாக சேர்ப்பது ஒரு வகை சுவையை தரும்.
👉 சிக்கன் எலும்போடு போட்டால் ஒரு சுவை, எலும்பில்லாமல் போட்டால் ஒரு சுவை. எலும்போடு இருப்பதே அதிக சுவையை தரும்.
👉 அரிசி போடும் முன் நீர் நன்றாக கொதிக்க வேண்டும். அரிசி முக்கால் பதமாக வேக வைப்பது அவசியம்.
👉 இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், கிராம்பு, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்து சோ;த்தால் பிரியாணி மிகுந்த சுவை தரும்.
👉 ஓவ்வொரு தடவை பிரியாணியை கிளறும் போது மூடி வைக்க வேண்டும்.
👉அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். அப்போது தான் பிரியாணி சுவை மாறாமல் இருக்கும்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா