அதிமுக கூட்டணியில் இருந்து சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது.

 


அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது.


தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

26.02.2021 திமுக, காங்கிரஸ் இடையே  அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ஆனால், அதிமுக சார்பில் இதுவரை கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும், தேர்தல் பரப்புரையில் மட்டுமே அதிக தீவிரம் காட்டும் முதல்வர் பழனிசாமி கூட்டணி கட்சிகளுடன் எந்த வித பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை.

அதற்கேற்றாற்போல சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, கூட்டணி பற்றி இனி தேமுதிகவிடம் கேட்காதீர்கள். 


தலைமை வகிக்கும் அதிமுகவிடம் கேளுங்கள். கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். 

மேலும், இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் இடையே கூட்டணி உறுதி ஆகியுள்ளது.