👉 தமிழகத்தில், படிப்படியாக பு ரண மதுவிலக்கை அமல் படுத்துங்கள் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது.
*************
👉 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலைத் தயார் செய்து பதிவேற்றுவதற்குப் பள்ளிகளுக்கு, தேர்வுத் துறை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.
************
👉 செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய உள்ள விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் பயணத்தின் போது பொருத்தமான புதுமையான உணவுகளையும், அவற்றுக்கான தயாரிப்பு முறைகளையும் கண்டுபிடித்து கூறினால் 5 லட்சம் டாலர் பரிசு வழங்குவதாக நாசா அறிவித்துள்ளது.
***********
👉 லடாக் எல்லையில் இருந்து பான்காங் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீனா தனது படைகளை விலக்கிக் கொண்டு வருகிறது.
*************
👉 இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
***************
👉 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
****************
👉 தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
**************
👉 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநரிடம் முதல்வர் ஜனவரி 29-ம் தேதி அளித்த கடிதத்தின் நகல் கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார்.
****************
👉 மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 28-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று காலையில் நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
****************
👉 தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
******************
👉 சேலம் மாவட்டத்தில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
********************
👉 புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜான்குமார் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து கூறியுள்ளார்.
***********************
👉 நீதிபதிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
*************************
👉 கடந்த 2009ம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.